ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3PM

author img

By

Published : Jul 20, 2021, 3:21 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 மணி
3 மணி

1. 10ஆம் வகுப்பு ஆல்பாஸ் - அமைச்சர் அன்பில் மகேஷ்

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாகவே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2.காங்கிரசின் பொய்களை முறியடியுங்கள் - நரேந்திர மோடி

காங்கிரசின் பொய்களை முறியடியுங்கள் என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

3.IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

4.டெலிபோன் ஒட்டுக்கேட்பு: நீதி விசாரணை கோரும் காங்கிரஸ்!
எதிர்க்கட்சித் தலைவர்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

5.எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

6.எடப்பாடி-சசிகலா சந்திப்பு? - அப்போலோ மருத்துவமனையில் பரபரப்பு

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனைக் காண எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றதால் பரபரப்பு நிலவியது.

7.ஆல் ஏரியாவில் தளபதி கில்லி: புதிய சாதனை படைத்த விஜய்

கேரளா பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் மலையாள முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலைத் தாண்டி விஜய்யின் படங்கள் அதிக வசூலை ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளன.

8.மக்காச்சோளத்திலிருந்து பைகள் தயாரிக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மக்காச்சோளத்திலிருந்து பைகள் தயாரிக்க ஊக்கமளிக்கப்படும் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

9.'கரோனா தொற்று அதிகமானாலும் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்'

கரோனா தொற்று அதிகமானாலும் விநாயகர் சதுர்த்தி விழா கண்டிப்பாக நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

10.அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம்

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல்செய்த மனுவிற்குப் பதிலளிக்க சசிகலாவிற்கு அவகாசம் வழங்கி சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.