ETV Bharat / city

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news@ 1PM - TOP TEN NEWS

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

ஒரு மணி செய்திச்சுருக்கம்
ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 4, 2021, 1:25 PM IST

1. முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்: தமிழ்நாடு அரசு

கரோனா நோய்த்தொற்றை முழுமையாகத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.

2. 'கரோனாவை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

"கரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

3. ஊரடங்கு தளர்வுகள்: முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் உற்சாக சைக்கிள் பயணம்!

சைக்கிளில் பயணிக்க தயாராகும் முதலமைச்சர் ஸ்டாலின்

4. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5. பீர் பாட்டில் வெடித்து டாஸ்மாக் பணியாளர் காயம்

டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வெடித்து ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. மதுரையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக துணை நடிகை புகார் அளித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் மதுரையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7. 'ராஜேந்திர பாலாஜிக்கு 1.5 டன் ஸ்வீட் பார்சல்' - வழங்கியது எப்படி?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

8. ட்விட்டர் தளம் மத வெறுப்பை பரப்புவதாக மேலும் ஒரு புகார்!

மத வெறுப்பை பரப்புவதாகக் கூறி ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரியின் மீதும், என் ஜி ஓ நிறுவனம் ஒன்றின் மீதும் டெல்லி சைபர் பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

9. ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் 64 திருத்தங்கள் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் இயற்றியிருந்த சட்டங்களில் 64 திருத்தங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

10. மெஸ்ஸியின் கலக்கல் ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி இக்குவேடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.