ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Sep 22, 2020, 1:12 PM IST

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

விவசாய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மோடி உருவபொம்மையை எரித்து சிபிஎம் போராட்டம்

விவசாய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செம்பனார்கோவில் கடைவீதியில் மோடி உருவபொம்மை மற்றும் விவசாய சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து போராட்டம் செய்தனர்.

'அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது' - மாநிலங்களவை துணைத்தலைவரின் செயலை பாராட்டும் மோடி

டெல்லி: நாடாளுமன்றத்தில் சில நாள்களுக்கு முன் தன்னை அவமதித்தவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் ஹரிவன்ஷ் தேநீரை பரிமாறியது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

குட்கா விவகாரம் - திமுக முறையீட்டை ஏற்று நாளை விசாரணை

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்று காண்பித்த விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை நடத்தப்படயிருக்கிறது.

இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர்!

அரியலூர்: 'இந்தி தெரியாது' என்ற காரணத்திற்காக ஓய்வு பெற்ற மருத்துவருக்கு கடன் வழங்க வங்கி மேலாளர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரை விட்டு ஒதுக்கி, வீட்டைச்சுற்றி சுவர் எழுப்பப்பட்ட கொடுமை: பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கைகோரி புகார் மனு!

நாகை : ஊரை விட்டு ஒதுக்கிவைத்து வீட்டைச் சுற்றி சுவர் எழுப்பிய பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சரவணன் என்பவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு திறக்கப்படுகின்றனவா பள்ளிகள்?

சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்ததும் முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் 10, 11 ,12ஆம் வகுப்புகளை தொடக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

சென்னை: அரசு உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள், நேரடி வகுப்புகள் என முழுவீச்சில் செயல்படுகிறது. எனவே இந்தப் பள்ளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

5 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: கே.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட ஐந்து செயலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நீதிமன்றம்!

சென்னை: திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளியை காலணியால் தாக்கிய அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி: மாற்றுத் திறனாளியை காலணியால் தாக்கிய அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.