ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @11am
Top 10 news @11am
author img

By

Published : Sep 21, 2020, 11:21 AM IST

விதிமீறல்: 8 எம்.பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தானே கட்டட விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக இன்று(செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி இதுவரையில் 10 பேர் உயிரிழந்ததாக தானே மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'விவசாயிகளிடம் பொய் கூறுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்' - ப. சிதம்பரம்

டெல்லி: மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் உடனயாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் ஆய்வுக்கூட்ட நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற இருந்த ஆய்வுக்கூட்ட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவிட் நிவாரணப் பணிகள்: முதலமைச்சரிடம் ரூ.93 லட்சம் வழங்கிய அமைச்சர்!

சென்னை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கோவிட் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.93 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தொட்டில் இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!

சென்னை: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தொட்டில் கட்டிய புடவை இறுக்கி சிறுவன் உயிரிழந்தார்.

புதுச்சேரியில் வரும் நவம்பர் மாதம் முதல் விமான சேவை தொடக்கம்!

புதுச்சேரி: வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படுகிறது.

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: மதுபானம் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் வரி வருவாய் சரிவு!

புதுச்சேரியில் கரோனா ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், மதுபானம் உள்ளிட்டவற்றில் வரி வருவாய் சரிவு ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு.

ஆஸ்கர் ரேஸில் ப்ரியங்கா சோப்ரா!

நடிகை ப்ரியங்கா சோப்ரா 2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பேனாவை பழுது நீக்கித் தர ஒரு மருத்துவமனை - சிறப்பு செய்தி

இன்றைக்கு பெரும்பாலானோர் இங்க் பேனாக்களை பயன்படுத்தாத சூழலில், பழைய, விலையுயர்ந்த பேனாக்களை கட்டணமின்றி பழுது நீக்கித் தருகிறது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இயங்கி வரும் பேனா பழுதுநீக்கும் நிலையம் ஒன்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.