ETV Bharat / city

பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

ஈடிவி பார்த்தின் பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Sep 9, 2021, 11:09 AM IST

1.கொடிவேரி கூட்டுக்குடிநீர்: அக்டோபரில் தொடங்கிவைக்கிறார் ஸ்டாலின்

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கிவைக்கவுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

2.உலக அழகு தினம் - மனிதத்தின் வித்து!

உலக அழகு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொருவரும் தங்களைப் பொறுத்தவரையில் இந்த உலகில் எவையெல்லாம் அழகு என்பதை #Internationalbeautyday என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

3.தன்னைத்தானே மணந்துகொண்ட மாடல் அழகி!

மாடல் அழகி கிரிஸ் கேலரா தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: இதுதான் முதல்முறை!

தாய்லாந்து நாட்டிற்கு நட்சத்திர ஆமைகள் கடத்த முயன்ற வழக்கு சிபிஐக்கு (மத்திய புலனாய்வு அமைப்பு) மாற்றப்பட்டுள்ளது.

5.தண்ணீர் லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய வேன்: 5 பேர் உயிரிழப்பு

புதியம்புத்தூர் அருகே எதிரே வந்த தண்ணீர் லாரி மீது வேன் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

6.டெல்லி பெண் காவலர் பாலியல் வன்கொடுமை: நீதி கேட்டு பேரணி

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட பெண் காவலருக்கு நீதி கேட்டு, தாம்பரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7.பத்ம பூஷண் விருதுக்கு முதலமைச்சரின் பெயர் பரிந்துரை

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்குப் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பத்ம பூஷண் விருதுக்கு புதுச்சேரி முதமைச்சர் ரங்கசாமியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

8.ஆன்லைன் ரம்மி: துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏழு லட்சம் ரூபாயை இழந்ததால் மனமுடைந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9.திராவிடச் சிந்தனைகளை எளிய முறையில் வெளிப்படுத்தியவர் புலமைப்பித்தன் - சசிகலா

மறைந்த அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன் திராவிடச் சிந்தனைகளை எளிய முறையில் வெளிப்படுத்தியவர் என சசிகலா இரங்கல் தெரிவித்து ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

10.ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் இவ்வளவா?

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் 65 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.