ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM - 10 news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்...

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 9, 2021, 11:16 AM IST

1. அப்போதே மகேந்திரன் வந்திருந்தால் கோவையையே வென்று இருப்போம் - ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பே மகேந்திரன் திமுகவில் இணைந்திருந்தால், கோயம்புத்தூரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

2. எல். முருகன் மாநிலங்களவை உறுப்பினராக எந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்படயிருக்கிறார்?

ஒன்றிய இணை அமைச்சராகப் புதிதாக பதவியேற்றுள்ள எல்.முருகன், மாநிலங்களவை உறுப்பினராக எந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலை தேடிச் செல்கிறது, இந்த சிறப்புக் கட்டுரை.

3. போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் - வைரல் வீடியோ

கோவையில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதைக்காக ஊசி மூலம் உடலில் இளைஞர்கள் செலுத்திக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. இனி இரண்டு ஷிப்ட் - புதிய ரயில்வே அமைச்சர் உத்தரவு

ரயில்வே அமைச்சக ஊழியர்கள் இனி இரண்டு ஷிப்டுகளில் பணியாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

5. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேம்படுத்த வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ஊரகப் பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேம்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

6. ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு

கொளத்தூரில் நில உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த மூவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

7. கர்பிணிக்கு சிகா வைரஸ் பாதிப்பு - அச்சத்தில் கேரளா

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அம்மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

8. இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை - சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

9. பாடல்களை ஏலத்தில் விடும் ஜிவி பிரகாஷ்: டிஜிட்டல் உலகில் புது முயற்சி!

தான் இசையமைத்த ஆறு பாடல்களை புது முயற்சியாக ஒரு பைனான்ஸ் செயலி மூலம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏலத்தில் விட இருக்கிறார்.

10. வெளியானது மணிரத்னத்தின் 'நவரசா' டீஸர்!

சென்னை: நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட 'நவரசா' திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.