ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 AM
11 AM
author img

By

Published : Apr 15, 2021, 11:20 AM IST

1. விவசாயியின் கடன் தகுதி அதிகரிக்குமா?

விவசாயிகளில் பெரும்பான்மையானவர்கள் பயிர்க்கடனுக்காகத் தனியார் பணம் கொடுப்பவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து கடன் வசதியைப் பெறக்கூடிய கிராமப்புற குடும்பங்களின் எண்ணிக்கை வெறும் 17 விழுக்காடாக குறைந்துள்ளது.

2. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இருள்மூடிக் கிடக்கிறதா?

மேற்கு வங்கத்தில் 6,400 வாக்குச் சாவடிகள் பிரச்சினைக்குரியவை என்று தான் அடையாளப் படுத்தியிருப்பதாகவும், அதனால் மத்தியப் படைகளை இறக்கிவிட்டு அந்த மாநிலத்தின் எட்டுக் கட்ட வாக்குப் பதிவைக் கண்காணிப்பதாகவும் தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது. எனினும் முன்மாதிரி நடத்தை விதியைப் பாரபட்சமின்றி நடைமுறைப் படுத்துவதில் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இப்போது இருள்மூடிக் கிடக்கிறது.

3. 2 லட்சத்தைத் தாண்டிய ஒருநாள் கரோனா பாதிப்பு

இந்தியாவில் முதன்முறையாக ஒரேநாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4. நெல்லையில் இடி மின்னலுடன் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி: கோடை வெயிலுக்கு இடையே திடீரென இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

5. திருப்பூரில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை!

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

6. பாதாள சாக்கடையில் விழுந்த நபர்: வைரல் காணொலி

திருநெல்வேலி: பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

7. மினி லாரியில் கடத்த முயன்ற 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

மயிலாடுதுறை: மினிலாரியில் ரகசிய அறை அமைத்து ஆயிரத்து 50 லிட்டர் சாராயம் கடத்த முயற்சித்த ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்து மினி லாரியையும், சாராயத்தையும் பறிமுதல்செய்துள்ளனர்.

8. கேரளாவில் கடலுக்குள் விடப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள்!

கேரளாவின் கொல்லம் போஷிக்கரா கடற்கரையில் அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முட்டைகளை கவனிக்கும் பொறுப்பை திருவிதாங்கூர் நேச்சர் ஹிஸ்டரி சொசைட்டி நிறுவனத்தின் 15 பேர் கொண்ட குழுவினர் கவனித்தனர். இந்த முட்டைகள் குஞ்சு பொறித்த நிலையில் கடலில் விடப்பட்டன.

9. முதலீட்டாளர் ஆர்வத்தை கோவிட் முடக்கி விடவில்லை

ஐபிஓ-க்கள் (ஆரம்பப் பொதுப்பங்கு வழங்கல்), மற்றும் எஃப்பிஓ-க்கள் (பின்தொடரும் பொதுப்பங்கு வழங்கல்) உள்பட பொதுப்பங்கு வழங்கல் மூலமாகத் திரட்டப்பட்ட நிதி முந்தைய நிதியாண்டைவிட இரட்டிப்பாகி இருக்கிறது. மேலும் சிறப்புப் பரஸ்பர நிதி (unique mutual fund) முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் பத்து விழுக்காடு அதிகரித்திருக்கிறது. அதைப் பற்றிய ஈடிவி பாரத் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதியின் செய்தித் தொகுப்பு.

10. தமிழ்ப் புத்தாண்டு: கனி காணும் நிகழ்ச்சியில் பக்தர்கள்!

தமிழ்ப் புத்தாண்டான சித்திரை விஷு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய முறையிலான கனி காணும் நிகழ்ச்சி கோயில்களிலும் வீடுகளிலும் கணி காணும் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவிலில் கிருஷ்ணன்கோவில், ஆதிபராசக்தி கோவில், நாகராஜா கோவில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் ஏராளமான கனி காய்களைப் படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.