அரசியல் ஆசையை வெளிப்படுத்திய வைகோ மகன்
மக்கள் என்னை எம்.எல்.ஏவாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ பார்க்க எண்ணினால் அப்போது நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் மகன் துரை வையாபுரி கூறியுள்ளார்.
சிறப்பாக நடந்து முடிந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம், ’கோவிந்தா கோவிந்தா’ கோஷம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.
கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா புதிய சாதனை!
கம்பலா ஓட்டப்பந்தய வீரர், கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா 100 மீட்டர் பந்தய தூரத்தை 8.78 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு இவர் கம்பலா போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்: நரேந்திரபூரில் 56 குண்டுகள் பறிமுதல்!
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் நரேந்திரபூரில் மார்ச் 27-28 தினங்களுக்கு இடைப்பட்ட இரவில் 56 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு, முதல்கட்ட வாக்குப்பதிவே சாட்சி - அர்ஜுன் முண்டா
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்கள் திரண்டு வந்து வாக்களித்தது, அங்கு பாஜக ஆட்சி அமையவுள்ளதை காட்டுகிறது என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்
பழங்காநத்தம் சரவணா ஸ்டோர் அருகே அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. 8 பேர் காயமுற்றனர்.
உணவக உரிமையாளரை ஊரை விட்டு விலக்கி வைத்த ஜமாத் நிர்வாகம்? பிரச்னையை சுமுகமாகத் தீர்த்து வைத்த டிஎஸ்பி
ஜமாத் நிர்வாகம் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துட்டதாக உணவக உரிமையாளர் ஒருவர் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.அண்ணாதுரை அப்பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வைத்தார்.
முதியோர் பென்ஷன் தொகைக்கு நடவடிக்கை - ராஜேந்திர பாலாஜி உறுதி
முதியோர் பென்ஷன் தொகை குறித்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்த நிலையில், அதற்காக தனியாக ஆட்கள் நியமித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுயளித்தார்.
தாயை நினைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்கப் பேச்சு!
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, தனது தாயைப் பற்றி, ஆ.ராசா இழிவாக பேசியதை எண்ணி கண்கலங்கினார்.
ராஜபாளையம் அருகே 8.5 கிலோ கஞ்சா பறிமுதல்
ராஜபாளையம் பகுதியில் டிஐஜி தனிப்படை பிரிவு காவலருக்கு கிடைத்த தகவலின் பேரில் எட்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.