'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!'
டெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,881 பேருக்கு கரோனா பாதிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 31) ஐந்தாயிரத்து 881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 859ஆக அதிகரித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
யோகா, இயற்கை மருத்துவப் படிப்பிற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: யோகா, இயற்கை மருத்துவப் படிப்பிற்கு, ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அறிவித்துள்ளது.
2ஜி கைபேசிகளை ஒதுக்கும் காலம் வந்துவிட்டது: முகேஷ் அம்பானி
இந்தியாவும் பிற நாடுகளும் 5ஜி அலைகற்றை நோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வேளையில் 30 கோடி சந்தாதாரர்களை கொண்ட 2ஜி சேவையை பயன்படுத்தும் மக்கள், அடிப்படை இணைய வசதியை அனுபவிக்க முடியாத சூழல் உள்ளது.
'தில் பேச்சாரா' படத்தை என்னால் பார்க்க முடியாது - ஸ்வஸ்திகா முகர்ஜி
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான 'தில் பேச்சாரா'வில் நடித்த நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி அந்த படத்தை தன்னால் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
11 மாதங்களில் ஒரு லட்சம் கார்களை விற்ற கியா மோட்டார்ஸ்!
வெறும் ஒரு வாகனத்துடன் 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த கியா மோட்டார்ஸ் 11 மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இரண்டாவது முறையும் கரோனா பாசிட்டிவ் - போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மெக்சிகோ வீரர்
லண்டன்: பார்முலா ஒன் பந்தய வீரரான செர்ஜியோ பெரேஸுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரம் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அதிபரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கரோனா!
பிரசிலியா: பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவைத் தொடர்ந்து அவரது மனைவி மைக்கேல் போல்சனாரோவுக்கும் தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை தள்ளிவைப்பதற்கான அவசரச் சட்டம் இயற்றியது ஹாங்காங் அரசு!
கரோனா தாக்கத்தின் காரணமாக தேர்தலை தள்ளிவைக்க, கேரி லாம் தலைமையிலான அரசு அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.