ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 AM
TOP 10 NEWS 9 AM
author img

By

Published : Aug 16, 2020, 9:03 AM IST

அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிசின் வேர்களை நோக்கிய பயணம் இது!

திருவாரூர்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான திருவாரூரைச் சேர்ந்த துளசேந்திரபுரம் கிராமத்தின் மக்கள், அவர் வெற்றி பெற பூஜை செய்து, கட்-அவுட் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

''உங்கள் பயணத்தில் நானும் இணைந்துகொள்கிறேன்'' தோனியுடன் ஓய்வை அறிவித்த ரெய்னா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று(ஆக.15) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த சில மணி நேங்களிலேயே, சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருமடங்கு விலை உயர்ந்தும் உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கும் உப்பளத் தொழிலாளர்கள்!

கரோனா பரவலைத் தடுக்க பெரும்பாலானோர் கல் உப்பை கிருமிநாசினி போன்று பயன்படுத்துவதால், அதன் தேவை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இருமடங்கு விலை இருந்தும், தேவைக்கும் குறைவான உற்பத்தியால் இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

அப்பா மீண்டெழுந்து வரும் வரை பொறுமை காக்க வேண்டும் - எஸ்.பி. சரண் வேண்டுகோள்!

அப்பாவின் நுரையீரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் மீண்டெழுந்து வரும் வரை பொறுமை காக்குமாறு பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள காணொலியில், அவரது மகன் எஸ்.பி. சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சலசலப்பு இடம் கொடுக்காமல் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் - கட்சியினருக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிவுரை!

சென்னை: சலசலப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஒன்றிணைந்து உழைத்திட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிவுரை வழங்கியுள்ளனர்.

கோயில்களின் அறங்காவலர்கள் நியமன விவகாரம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர்கள் விவரங்களை பொது அறிவிப்பாக வெளியிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஆல்பின் தனது செல்போனில் எலி மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும், எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும், எலி மருந்தின் விஷத்தன்மை எப்படி இருக்கும் என அனைத்தையும் ஆன்லைனில் கற்றுள்ளார். பின்னரே எலி மருந்தை ஐஸ்கிரீமில் கலந்துள்ளார்.

இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன - பி.எஸ்.எஃப் தலைவர் உறுதி!

சண்டிகர்: இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளது என எல்லைப் பாதுகாப்பு படையின் டி.ஜி. எஸ்.எஸ்.தேஸ்வால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

'காதலி மாறலாம் ஆனால் காதல் மாறாது' - காதலில் ஆண்கள் எப்போதும் 'அட்டகத்தி'தான்

எட்டு ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் வெளியான அட்டகத்தி படத்தை சிறந்த தமிழ்ப்படங்களின் பட்டியலில் இருந்து தவிர்த்துவிட முடியாது. இளமை, காதல், குறும்பு, அவமானம், ஏமாற்றம் என முன்னாள், இந்நாள் இளைஞர்களின் இனிமையான காதல் அனுபவங்களின் தொகுப்பாக அமைந்து ரசிக்க வைத்தது இந்த படம்.

பெய்ரூட் வெடிவிபத்தை விசாரிக்க லெபனான் விரைந்த எஃப்.பி.ஐ.

பெய்ரூட்டில் நடந்த மாபெரும் வெடிவிபத்து குறித்து விசாரிக்க அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. (FBI) புலனாய்வு அமைப்பு லெபனான் சென்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.