ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம் - 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jun 29, 2021, 3:10 PM IST

1. நீட் ஆய்வுக்குழு - மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப்பெற்றதா என உயர் நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பட்டை எடுக்க முடியாது? எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

2. viral video: 'ஸ்டாலினின் ஃபிட்னஸ் சீக்ரெட்'

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பணிகளுக்கு இடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஈடுபாடு கொண்ட மு.க. ஸ்டாலின், பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

3. தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக பீட்டர் அல்போன்ஸை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

4. 'சித்த மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை' - ஹெச். ராஜா வலியுறுத்தல்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனியார் சித்த மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்

5. யூடியூபர் மதன் மனைவிக்கு ஜாமீன்

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கியது சைதாப்பேட்டை நீதிமன்றம்

6. தொலைநோக்கு விதைகளை விதைத்த 'செஞ்சுரி நாயகர்' நரசிம்ம ராவ்!

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் இந்தியாவில் எவ்வாறு வெற்றிகரமாக, பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தார் என்பது குறித்து யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவரது 100ஆவது பிறந்த நாள் நேற்று(ஜூன் 28) கொண்டாடப்பட்டது. அவரது 100ஆவது பிறந்த ஆண்டில், ஈடிவி பாரத் ஊடகம் நரசிம்ம ராவை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறது.

7. ’இது நீண்ட காலமாக உபயோகத்தில் உள்ள வார்த்தை தான்...’ - ’ஒன்றியம்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழிசை!

”எவ்வாறு தமிழ்நாடு அமைச்சர்கள் பதவியேற்கும்போது ”தமிழ்நாடு அமைச்சர்களாக பதவியேற்கிறோம்” என்று கூறினார்களோ, அதேபோல் 'Indian Union Territory of Pudhuchery' என்ற வாசகம் மொழிபெயர்க்கப்பட்டு 'இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு’ என பயன்படுத்தப்பட்டது” - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

8. சூரப்பா மீீீதான அறிக்கைத் தயார்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளோம் என ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

9. முன்னறிவிப்பின்றி வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' பட அப்டேட்

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் முக்கிய அப்டேட்டை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி படக்குழு வெளியிட்டுள்ளது.

10. 102 நாள்களுக்குப் பிறகு 40,000 ஆக குறைந்த கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூன் 28) 56 ஆயிரத்து 994 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.