ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம். - TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS 3 PM  ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்...

author img

By

Published : Jan 22, 2021, 4:10 PM IST

கிராமப்புற மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை பாஜக கைவிட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவ கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட்டு, புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கத்தியை காட்டி வழிப்பறி செய்த இருவர் கைது

சங்கர் நகர் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கறிக்கோழி விலை 4 நாட்களில் 17 ரூபாய் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 4 நாட்களில் 17 ரூபாய் சரிந்து கிலோ ரூ.64க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு: பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

கழிவு நீர் சேமிப்பு தொட்டி மூடப்படாமல் இருந்ததால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸார் முன்பே அறைந்த பெண்

பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மங்களூரு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரை காவல் துறையினர் முன்பே பெண் அறைந்தது பரபரப்பாகியுள்ளது.

22 நகரங்களுக்கு செல்லும் இரண்டாம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி

கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி நாடெங்கிலும் உள்ள 22 நகரங்களுக்கு அனுப்பப்படவுள்ளது.

காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் திதி கொடுக்க வந்த அரசு மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் அஸ்வினி, ரங்கிரெட்டி இணை!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தலைக்கவசம் ஏன் முக்கியம்? - சிறப்புக்கட்டுரை

தரமான தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பயன் என்ன, அவற்றை மீறினால் என்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறித்து விவரிக்கிறது, இந்த சிறப்புத் தொகுப்பு.

நடப்பாண்டில் 23.41% அதிகரித்த நெல் கொள்முதல்

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தற்போதுவரை 573.36 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23.41 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.