ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS 1 PM - இன்றைய முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 31, 2021, 1:09 PM IST

1. போதை பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு

நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் வகுப்புகளைக் கவனிக்க அனுமதிக்கக் கோரிய வழக்கு விசாரணையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனக் கட்டாயம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்து சாலை மறியலில் ஈடுபட்ட ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.

4. பெற்றோர்கள் பயப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் - அன்பில் மகேஷ்

பெற்றோர்கள் அச்சப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

5. மாநகராட்சியில் வார்டுகள் சீரமைக்கப்படும் - அமைச்சர் கே.என். நேரு

சென்னை: மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் மாநகராட்சியில் உள்ள வார்டுகள் மறுசீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

6. வரலாற்றில் முதன்முறை: ஒரேநாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரேநாளில் ஒன்பது நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

7. PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!

பாரா ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அடானா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்தியா டோக்கியோவில் தனது எட்டாவது பதக்கத்தைப் பெற்றுள்ளது.

8. முடிந்தது 20 ஆண்டுகள் அரண்: வெளியேறிய அமெரிக்கப் படை!

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

9. 10 years of மங்காத்தா - வெங்கட் பிரபு விளையாடிய தரமான கேம்

யாரும் எதிர்பார்க்காத வகையில் மங்காத்தா படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. அதுமட்டுமின்றி படத்திலும் அஜித்தை வேறு ஒரு பரிமாணத்தில் வெங்கட் பிரபு காட்டியிருந்தார்.

10. அஜித் பட ரீமேக்கில் சிரஞ்சீவி

ஹைதராபாத்: வேதாளம் படத்தை தொடர்ந்து அஜித்தின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.