ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம் - 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம் ..

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jun 23, 2021, 9:17 PM IST

1. கும்பமேளா கோவிட் சோதனை ஊழல் குறித்து ஆராய குழு அமைப்பு!

கும்பமேளா கோவிட் சோதனை ஊழல் குறித்து ஆராய மேலும் இரண்டு சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு ஹரித்வார் கும்பமேளாவில் நடைபெற்ற கோவிட் பரிசோதனை குளறுபடிகள் குறித்து ஆராய்கிறது.

2. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3. கரோனா 3ஆம் அலை: குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கட்டுப்பாடு

கரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாவது அலையின் தாக்கம் அதிகரிக்கும் என அச்சப்படும் சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகளுக்கான ஆதார் மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

4. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

ராமநாதபுரம்: மாவட்டத்தில் குடிதண்ணீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

5. ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில், பாஜக எம்எல்ஏக்கள், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து ஒரு மணிநேரம் பேசினர்.

6. தாவூத் இப்ராஹிம் சகோதர் கைது!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதர் இக்பால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

7. ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபிஸ் சயீத் வீட்டின் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

8. ’75 ஆண்டுகளில் இதுபோன்ற சண்டையிடும் பிரதமரை நாடு பார்த்ததில்லை’ - மனீஷ் சிசோடியா

புது டெல்லி: மாநில அரசு முன்மொழிந்த நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை வேடிக்கையான காரணங்களைக் கூறி ஒன்றிய அரசு நிராகரித்து வருவதாகவும், பிரதமர் மோடி மாநிலங்களுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

9. பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ - ஜூன் 25 டீசர்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபி சிம்ஹா சிங்கிள் ஹீரேவாக நடிக்கவிருப்பதால், அவரது ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

10. WTC FINAL: டிராவாக்குமா இந்தியா; கைவிட்டார் கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இறுதிநாளின் முதல் செஷனில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்து, நியூசிலாந்தை விட 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.