முதல் சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், கங்கண கிரகணமாக (வளைய சூரிய கிரகணம்) இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது;
இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது. இந்திய நேரப்படி மதியம் 1:42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:41 வரை இந்நிகழ்வு நிகழவுள்ளது.
![சூரிய கிரகணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12078604_af.jpg)
ஊரடங்கு நீட்டிப்பா?
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். கரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12078604_afgrtrs.jpg)
மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. மருத்துவபடிப்புகளில் ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அமலில் உள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் பொய்யாமொழி மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
![மருத்துவ படிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12078604_afg.jpg)
மண் சேகரிப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இன்று மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது. மண் பரிசோதனை ஒன்றுக்கு கட்டணம் 20 ரூபாய் ஆகும் என அம்மாவட்ட வேளாண்துறை தெரிவித்துள்ளது.
![மண் சேகரிப்பு முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12078604_afgrtr.jpg)
ஒன்பிளஸின் புதிய மாடல் அறிமுகம்
புதிய ஒன்பிளஸ் நோர்ட் தொலைபேசி இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. அமேசானில் வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் CE 5G குறைந்தது 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு திறன் உடையது.
![ஒன்பிளஸின் புதிய மாடல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12078604_afde.jpg)