ETV Bharat / city

தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - புதுச்சேரியில் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Apr 18, 2022, 6:00 PM IST

சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிவிப்பில், 'வடதமிழ்நாடு கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 19: தென்தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் நாளை(ஏப்ரல்.19) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 20: தென்தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல்.20) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 21: தென்தமிழ்நாடு, வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 21ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 22: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை' என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.