ETV Bharat / city

'வானில் ஓர் கண்ணாமூச்சி' - இன்று சூரிய கிரகணம் - சூரிய கிரகணம் குறித்த கட்டுக் கதைகள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணமாக இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1:42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6:41 வரை இந்நிகழ்வு நிகழவுள்ளது.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்
author img

By

Published : Jun 10, 2021, 7:22 AM IST

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், பூமியின் பார்வையில் இருந்து சூரியன் மறையும். இதுவே 'சூரிய கிரகணம்’ என்று கூறப்படுகிறது. அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக நிகழலாம். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணமாக இன்று நிகழ்கிறது.

இது போன்ற 'வளைய சூரிய கிரகணம்' இதற்கு முன்பு ஜனவரி 15, 2010, டிசம்பர் 26, 2019, ஜூன் 21, 2020 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90 விழுக்காடு பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வாகும்.

வளைய சூரிய கிரகணம்
வளைய சூரிய கிரகணம்

எங்கு? எப்போது? பார்க்கலாம்:

சந்திர கிரகணம் கடந்த மே 26ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், இன்று, மதியம் 1.42 மணி முதல் மாலை 6.41மணி வரை சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமாக இருக்கும். இந்தியாவில், இது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் ஓரளவு காணப்பட்டாலும், முழு கிரகணத்தை வட அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பாவில் காண முடியும் எனக் கூறப்படுகிறது. . 2021ஆவது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி நிகழும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியனின் கண்ணாமூச்சியும் கட்டுக்கதைகளும்:

கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால், கிரகணங்களால் நம் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் பல பகுதிகளில் சூரிய, சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகளை பார்க்க அனுமதிப்பதில்லை, அவர்கள் கிரகணத்தினைப் பார்க்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை இன்றளவும் உள்ளது. இதுபோன்ற நம்பிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எப்போதும் போல் கர்ப்பிணிகள் அன்றும் நடமாடலாம், சாப்பிடலாம் எந்த மாற்றமும், பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பிணிகள் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்

சூரிய கிரகணத்தைப் பார்க்க அனைவருக்கும் இருக்கும் முன்னெச்சரிக்கையே இவர்களுக்கும் பொருந்துமே தவிர, எந்தப் புதிய கதிர் வீச்சுகளும் ஏற்படாது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது; இதனைப் பார்ப்பதற்கு அதற்குரிய கிரகண கண்ணாடிகளை அல்லது முறையான ஃபில்டர்களுடன் கூடிய கேமராவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுதல், குடித்தல், குளித்தல், வெளியே செல்லுதல் போன்ற செயல்களைச் செய்யலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.