சென்னை: எழுத்துத் தேர்வு ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊரடங்கு நாள்களில் போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 8, 9ஆம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டப்படி நடைபெறும்.
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகள் அடங்கிய கட்டடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கு, வரும் 8ஆம் தேதி, காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது.
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 9ஆம் தேதி, காலை 10 மணி முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Vaccination work Status: பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்