சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை ஒன்றை இன்று (ஜன. 28) வெளியிட்டுள்ளது. அதில்,"பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்கள், குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக ஜன.30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி, 4ஆவது சனிக்கிழமை நியாய விலை கடைகளுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பை தன்வசமாக்கிய ஏழை மாற்றுத்திறனாளி மாணவி