ETV Bharat / city

தீபாவளி பட்டாசுகளுக்கு கட்டுப்பாடு? - தமிழக அரசு ஆலோசனை - சிவகாசி ஸ்பெஷல்

வரும் அக்.24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 26, 2022, 6:25 PM IST

சென்னை: நாடெங்கும் வரும் அக்.24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுகள் விற்பனை, பட்டாசுகள் வெடிப்பதற்காக கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் அக்.24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியன குறித்து வரும் 28ஆம் தேதி அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற உள்ளது. சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனைக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.