ETV Bharat / city

அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு! - Rs 92 lakh

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Oct 29, 2021, 10:48 AM IST

சென்னை: ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் பென்னாத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் சுற்றுச் சுவர்களும் ரூ.92 இலட்சம் மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டப் பேரவை

முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில், இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் உரையாற்றி இருந்தார்.

அப்போது, “தஞ்சாவூர் மாவட்டம், கண்ணந்தங்குடி, மேலையூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவரும், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் பென்னாத்தூர் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் சுற்றுச் சுவர்களும் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்” என்றும் அறிவித்திருந்தார்.

ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கீடு

அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.28.56 லட்சத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம், கண்ணந்தங்குடி, மேலையூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.50.93 லட்சத்திற்கும் தமிழ்நாடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.12.85 லட்சத்திற்கும் நிர்வாக அனுமதி அளித்தும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் - ரூ.694 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.