சென்னை : ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜர் பிறந்த இடத்தில் சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஇராமானுசர் பிறந்த இடத்தில் சுற்றுலா தகவல் மையம், அரங்கம், பண்பாட்டு மையம், மற்றும் இதர வசதிகள் அமைக்கப்படும்.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் நினைவு இல்லம் செல்வதற்கு இரண்டு படகுகள் 150 இருக்கை வசதிகளுடன் வாங்கப்படும். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 முக்கிய நினைவு சின்னங்களை பாதுகாத்து புனரமைத்தல், காஞ்சிபுரம் பக்தர்களுக்கான சுற்றுலா ஓய்வு இல்லம் கட்டுதல், எழும்பூர் அருங்காட்சியகம் மேம்படுத்துதல், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கு அடிப்படை வசதிகளை செய்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.164.07 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மொட்டையடிக்க கட்டணமில்லை, வள்ளலார் சர்வதேச மையம்; அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் 112 புதிய அறிவிப்பு