ETV Bharat / city

யானைகள் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு - elephants in coimbatore

யானைகளின் வழித்தடம், வாழ்விடத்தைக் கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்
author img

By

Published : Jul 24, 2021, 7:48 PM IST

கோயம்புத்தூர்: யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

அப்போது தமிழ்நாடு அரசு, "நீலகிரி வனப்பகுதியில் யானைகளின் வழித்தடம், வாழ்விடத்தைக் கண்டறிதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்டவை குறித்து சர்வதேச அளவிலான நிபுணர்கள், உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இதுதொடர்பான அறிக்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தொடரும் யானை இறப்புகள்... பாதுகாக்கத் தவறுகிறார்களா வன அலுவலர்கள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.