சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருள்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து சம்பந்தபட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்படி வரும் பொருள்கள் தரமாக இல்லையென்றால் ஊழியர்களே திருப்பி அனுப்ப வேண்டும். அதேபோல,ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் உள்ளதா என்பது குறித்து அலுவலர்கள் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டாத புகார்கள் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இருந்ததாக முதியவர் ஒருவர் ஊழியரிடம் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து முதியவர் மீது தவறான தகவலை பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தாக கூறப்பட்டநிலையில், அவரது மகன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு புகார்கள்; முதலமைச்சர் இன்று ஆலோசனை