சென்னை: சென்னை - கோயம்புத்தூர் விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய நில கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தமிழநாடு அரசு இதுவரை 308 கோடியே 46 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுக்க மீதமுள்ள தொகையை அரசு வழங்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு மீதமுள்ள தொகையில் 1,132 கோடி ரூபாயை விடுவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: VIRAL VIDEO: பாலத்தின் அடியில் சிக்கிய ஏர்-இந்தியா விமானம்