நாடு முழுவதும் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு முப்படை வீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 1 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியிடம் வழங்கினார்.
பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து படை வீரர்களுக்கும், முன்னாள் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்த அவர், அனைவரும் கொடி நாள் நிதி வழங்கி முன்னாள் படை வீரர்களுக்கு வகுக்கபட்டுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என்று கூறினார்.
மேலும் கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் கொடிநாள் நிதியாக 47.46 கோடி வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார். இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொடி நாள் நிதியை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமியிடம் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: