சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இன்று (மார்ச் 6) 35 மாணவர்களுக்கு போர்ப் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் 17 ஆயிரத்து 500 டாலர்களை (சுமார் ரூ. 14 லட்சம்) தமிழ்நாடு அரசே செலுத்தியது.
டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்குத் தனி விமானத்தை அமர்த்தி இன்று உடனடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். உக்ரைனில் தமிழ்நாடு மாணவர்களை மீட்பதற்கான சிறப்புக்குழு இதில், தொடர் சிறப்புக் கவனம் செலுத்தி பணியினை விரைவு படுத்திக்கொண்டிருக்கிறது.
இப்பணிக்கு என்று இதுவரையில் 3.50 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியைப் பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய பொன்னேரி மாணவி - ஆரத்தழுவி வரவேற்ற பெற்றோர்