தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு பணியாட்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் நிதித்துறையில் பணியாற்றுவதற்காக தேர்வாணையம் மூலம் தட்டச்சர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
இதேபோல் நிதித்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு தணிக்கை துறைக்கு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க...விவசாயிகள், அரசுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி!