சென்னை தலைமைச் செயலகத்தில் மழைக்கால சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக். 19) வினாக்கள் விடைகள் நேரத்தில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் தனது தொகுதி குறித்த கேள்வி எழுப்பினார். அப்போது அவர், "கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக கரைகள் உடைப்பு ஏற்பட்டு நகர, கிராம பகுதிகளில் நீர் புகுந்தது. மக்கள் பெரும் சிரமத்திற்கும் சேதாரத்திற்கும் உள்ளாகினர்.
இந்த ஆற்றின் கரைகளை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யவில்லை, கரை உடையவில்லை. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இதெல்லாம் நடைபெறுவதால் எவை முக்கியமானதோ அதை உடனடியாக செய்து தருவோம்" என்றார்.
இதையும் படிங்க: தடையை மீறி தர்ணா - ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது