சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.
மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆலோசனை தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவ வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.