சென்னை: தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பால் 673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களின் சிகிச்சைக்காக 35,000 குப்பிகளை பல்வேறு விற்பனையாளர்களுக்கு வழங்க மாநில அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், தமிழ்நாட்டிற்கு, கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய 1,790 மருந்து குப்பிகள் போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக 30,000 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.