சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பெருநகர மாநகராட்சி ஆணையர், பொது சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "ஒன்றிய அரசு ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்து அறிவுறுத்தியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் 24ஆம் தேதி கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தென் ஆப்ரிக்காவின் போட்ஸ்வானாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் தொற்று, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விமானப் பயணிகளுக்கு பரிசோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
ஒமைக்ரானிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?
Omicron Variant வைரஸ் தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல், காற்றோட்டமான அறைகளில் தங்குதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தென்ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Omicron variant: உலக நாடுகளை மிரட்டும் உருமாறிய கரோனா - பிரதமர் அவசர ஆலோசனை