தமிழ்நாடு 2020-21 நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்லவம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர், நாட்டின் பொருளாதாரச் சூழல் மந்தமாக இருந்த போதிலும், அதைத் தமிழ்நாடு சிறப்பாகக் கையாண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அவர், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளை தமிழ்நாடு திறம்பட சமாளித்துள்ளது எனவும் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக உள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 21 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாகவும் 2020-21ஆம் ஆண்டில் பத்தாயிரத்து 970 கோடியாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி 5 விழுக்காடுக்கும் குறைவாக உள்ள நிலையில் தமிழ்நாடு 7 விழுக்காடுக்கும் மேலாக வளர்ந்துவருகிறது என நிதியமைச்சர் பெருமிதத்தடன் தெரிவித்துள்ளார். அத்துடன், நிதி ஆயோக் அமைப்பின் வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது எனவும் நல்லாளுமை பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நிர்வாகம், சேவை வழங்கல் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு அரசு முழுக்கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்2020: கல்வித் துறைக்கு ரூ. 34, 841 கோடி ஒதுக்கீடு!