ETV Bharat / city

Go Back Modi என ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக புகார்! - பாஜக வழக்கு

சென்னை: #GoBackModi என ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக சார்பில் சிபிசிஐடி சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

நடிகை ஓவியா மீது பாஜக வழக்கு!
நடிகை ஓவியா மீது பாஜக வழக்கு!
author img

By

Published : Feb 15, 2021, 10:43 AM IST

Updated : Feb 15, 2021, 1:22 PM IST

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கிவைக்க நேற்று (பிப். 14) சென்னைக்கு வந்திருந்தார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற பதிவு ட்ரெண்ட் ஆகியது.

இந்தப் பதிவை ஆதரித்து நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய முன்தினம் (பிப். 13) பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவைக்கண்ட பாஜகவினர் பலரும் நடிகை ஓவியாவைக் கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக வழக்கறிஞரான அலெக்சிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நடிகை ஓவியாவின் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், பிரதமரை அவமதிக்கும் வகையிலும் உள்ளதாகக் கூறி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகை ஓவியா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க...சென்னை டெஸ்ட்: ட்விட்டரில் பதிவிட்ட மோடி!

Last Updated : Feb 15, 2021, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.