ETV Bharat / city

திமுகவினரின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை - அண்ணாமலை

author img

By

Published : Oct 9, 2021, 8:38 PM IST

Updated : Oct 9, 2021, 8:48 PM IST

ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும் திமுகவினரின் வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, திமுக,TN BJP CHIEF Annamalai
அண்ணாமலை

சென்னை: திருநெல்வேலி திமுக எம்.பி., பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (அக். 9) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திருநெல்வேலி திமுக மக்களவை உறுப்பினரான ஞானதிரவியம், நேற்றிரவு (அக். 8) வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஏவிஎம் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த, பாஜக நிர்வாகி, ஆவரைகுளம் பாஸ்கரனை அவரே நேரடியாகச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

சிசிடிவி உடைப்பு

அவரை அடித்தது மட்டுமின்றி, அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கிவிட்டு, சிசிடிவி காணொலி பதிவுகளையும் எடுத்துச் சென்றுவிட்டார். அங்குள்ள அனைவரின் முன்னர் இதை செய்துள்ளார்.

அத்துடன் விடாமல் கடைக்கு வெளியே காரில் உட்கார்ந்து கொண்டு பாஸ்கரன் வெளியே வரும்வரை, மேற்கொண்டு தாக்குதல் நடத்த தயாராக இருந்திருக்கிறார். பாஸ்கரன் வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து என்று கடையில் காத்திருந்து, பின்னர் மருத்துவமனைக்கு செல்ல பயந்து நேரடியாக தன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

தொடரும் எம்.பி.,களின் அராஜகம்

திருநெல்வேலிக்கு செல்லும் வழியில் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில், அவர் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லவில்லை. பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன், நிர்வாகிகள் இன்று (அக். 9) காலை அவரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.

திமுக எம்.பி.,களின் அராஜகம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் என்பவர் மீது தற்போது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது, திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

இவர் மீதும் கடுமையான வழக்குப்பதிவு செய்து காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் அதிகாரம் என்பது நிலையில்லாதது. பிரியாணி கடை முதல் டீக்கடை வரை திமுகவின் அராஜகத்தையும், ரவுடியிசத்தையும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை

திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், ஆளுங்கட்சியாக வந்தபிறகும் கூட அதே பழக்கத்தைதான் தொடர்கிறார்கள். ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும் இவர்களுடைய வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை.

இப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழ்நாட்டின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி. இதுபோன்ற நேரத்தில் அரசியல் பாரபட்சம் பார்க்காமல் காவல் துறை தனது கடமையை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும், என்பதை காவல் துறைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: TOP 10 HIGHLIGHTS: 3,000 கிலோ ஹெராயின் வழக்கு முழு பின்னணி!

Last Updated : Oct 9, 2021, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.