நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 விழுக்காடு வாக்குகளும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்ட போடியில் 73.65 வாக்குகளும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 60.52 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.