ETV Bharat / city

‘அரியர் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணை இன்று வெளியீடு’ - அரியர் தேர்வு செய்தி

சென்னை: சட்டப் படிப்புக்கான அரியர் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் இன்று (டிச. 04) முடிவுசெய்யப்படும் என்று சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Will decide Law university arrear exams date after Sindacate meeting, Unicerisity told, MHC

author img

By

Published : Dec 4, 2020, 12:31 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக, இறுதி ஆண்டு தேர்வுகளைத் தவிர அனைத்துத் தேர்வுகள், அரியர் தேர்வுகளை ரத்துசெய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ தேர்வு நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (டிச. 04) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், அரியர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதி ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பினர்.

சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் முன்னிலையான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், சட்டப்படிப்புகளுக்கான அரியர் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை வெளியிடுவது குறித்து சிண்டிகேட் குழுவில் இன்று (டிச. 04) முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க...கோவையில் தொடர் மறியல் போராட்டம்: இடதுசாரி கட்சியினர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.