திருச்சி எம்பியும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுகரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் புகழ்மிக்க தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களுக்காக திறம்பட பணியாற்றியவர் என்று கூறினார்.
விமான நிலையத்தில் திரு நாவுக்கரசு உறுதியானவர், நேர்மையானவர், நல்ல அமைச்சராக இருந்து செயல்பட்டவர் என்றும் தற்போது அவர் நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அருண் ஜேட்லி மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல் தொடர்ந்து பேசிய அவர், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி மேம்படுத்தப்பட வேண்டி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் மாற்று நடப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்பதால் முதலமைச்சர் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.