காணும் பொங்கல் பண்டிகைய முன்னிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதேபோல் மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு, சுற்றுலாத்தலங்களில் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும் கடலில் குளிக்கச் செல்பவர்கள் பாதுகாப்புக்காக, மீட்புப் படையினருடன் 150 இயந்திரப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காணும் பொங்கலின்போது சிறுவர்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி குழந்தைகளுக்கு அவர்களின் கைகளில் பெற்றோர் பெயர், தொடர்பு எண்கள் கூடிய பேட்ச் கட்டப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்கள் பேட்டி
இதன் மூலம், குழந்தைகள் காணமல் போனாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இவை தவிர அவசர ஊர்திகள், மருத்துவக் குழுவினர், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவையும் தாயார் நிலையில் உள்ளன.