சென்னை: இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 20ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பிற்கும் சேர்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 27.4.2022 முதல் 29.4.2022 வரை, செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன. அறிவியல் பாட செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறைப்பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரிடம் அறிந்துகொள்ள வேண்டும்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார். மே 2022 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு; வாகனம் மீது கொடியை வீசி எறிந்து போராடியதால் பரபரப்பு!