சென்னை: தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு டிக்கெட் விலை குறைந்தபட்ச கட்டணம் ரூ.200 முதல் 8000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு டிக்கெட் கட்டணம் 2 மணி நேரத்திற்கு 200 மற்றும் 300 ரூபாய் எனவும், மேலும் ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.2000 மற்றும் ரூ.3000, ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 6000 மற்றும் 8000 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி!