ETV Bharat / city

கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை: சென்னையில் சோகம் - கணவன் மனைவி குழந்தை மரணம்

வண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்சினையால் மகனுக்கு விஷம் கொடுத்து தம்பதியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TRIPLE SUCIDE  chennai family suicide  vannarapettai tragedy  கடன் தொல்லையால் தற்கொலை  கணவன் மனைவி குழந்தை மரணம்  காவல் துறை விசாராணை
சென்னையில் குடும்பத்துடன் தற்கொலை
author img

By

Published : Dec 15, 2021, 2:59 PM IST

Updated : Dec 15, 2021, 3:19 PM IST

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையின் வெங்கடேசன் அலி தெருவைச் சேர்ந்தவர் டைலர் சிவாஜி. இவர் தனது மனைவி வனிதா, பத்து வயது மகன் வெற்றிவேல் ஆகியோருடன் வசித்துவந்தார். இவர் தண்டையார்பேட்டை பைப் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்தார். இவர்களது மகன் வெற்றிவேல் ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்துவந்தார்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் கடன் தொல்லையில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வனிதாவின் தாய் வத்சலா கதவைத் தட்டியுள்ளார்.

கதவு திறக்காததால் பின்னர் வீட்டின் ஜன்னலைத் திறந்து பார்த்தபொழுது கணவன், மனைவி, பேரன் மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். காவல் விசாரணையில் வீட்டிலிருந்து சிவாஜியின் மனைவி வனிதா எழுதிவைத்த கடிதத்தைக் கண்டறிந்தனர்.

காவல் துறையினர் கைப்பற்றிய கடிதத்தில் கடன் பிரச்சினையால் தாங்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதாக வனிதா எழுதியிருந்தார். கடன் பிரச்சினையால் பத்து வயது சிறுவன் உள்பட ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரூரில் மர்ம சத்தம்: பொதுமக்கள் பீதி

Last Updated : Dec 15, 2021, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.