சென்னை: தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வார நாள்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினரால் கடந்த 6ஆம் தேதி முதல் கடந்த ஒரு வாரத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கில் விதிகளை மீறியதற்காக ரூ.3.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதது, தகுந்த இடைவெளி கடைபிடிக்காதது என 254 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாதவர் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறியதற்காக 43,417 நபர்களிடம் இருந்து 86 இலட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் 40,148 நபர்களிடம் இருந்து 83 இலட்ச ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு