ETV Bharat / city

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூவர் கைது - painkillers

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த விற்பனை செய்த மூவரை கைது செய்து, 600 மாத்திரைகள், 100 ஊசி சிரிஞ்சிகள் பறிமுதல் செய்யப்படுள்ளன.

மாணவர்களை குறிவைத்து வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மூவர் கைது

author img

By

Published : Jul 1, 2022, 5:51 PM IST

சென்னை: தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி, பள்ளி மாணவர்களை குறி வைத்து கல்லூரி மற்றும் பள்ளிகள் இருக்கும் இடங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை, போதைக்காக பயன்படுத்த, விறபனை நடப்பதாக புகார்கள் வந்தது.

அதனடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்த போது, பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே மூவர் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் பைசல்(24), ஜகருல்லா(27), உதயசீலன்(28), என்பதும், வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 100mg Tydol, 50mg vorith வலி நிவாரணி மாத்திரைகள் 600, மற்றும் 100 சிரிஞ்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மும்பையில் இருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி கொள்வதால் இதயம் வால்வு சுருக்கம், சிறுநீரகம் செயலற்று போவது, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பக்க விளைவுகள் நேரிட வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும், எனவும் காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பர்மா பஜாரில் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.