சென்னை: தமிழ்நாடு காவல் துறை, தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டை ஆப்ரேஷன் அடிப்படையில் அதிரடியாக இறங்கி, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அந்த வகையில் முதல் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் மற்றும் வெளிமாநிலங்களில் பதுங்கி இருக்கும் ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதில் 133 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் பல ஆண்டுகளாக பிடிபடாமல் தலைமறைவாக இருந்த ரவுடிகள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த 48 மணி நேரத்தில் நடந்த ரவுடிகளுக்கு எதிரான மின்னல் வேட்டையில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள், 110 ரவுடிகள்மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தவர்கள். இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பிடிபட்ட மீதமுள்ள 979 ரவுடிகள், காவல் நிலைய பதிவேடு குற்றவாளிகள், இவர்கள் மீது நன்னடைத்தை உறுதிமொழி பெறப்பட்டது. அதை மீறும் பட்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதகாலம் சிறையில் அடைக்கப்படுவர் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' - 133 ரவுடிகள் கைது