ETV Bharat / city

’திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி' - சத்திய பிரதா சாஹு - இடைத் தேர்தல்

சென்னை: திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியாக உள்ளதென இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

officer
officer
author img

By

Published : Mar 2, 2020, 7:04 PM IST

திமுகவைச் சேர்ந்த திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் கடந்த வாரம் காலமானார்கள். இதனால் அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அடுத்த ஆண்டு மே 25ஆம் தேதியுடன் நடப்பு ஆட்சியின் காலம் முடிகிறது என்பதால், 6 மாத காலத்திற்குள் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு கூறுகையில், திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்கும், இடைத் தேர்தலுக்கும் ஒராண்டு கால இடைவெளி இருக்க வேண்டிய நிலையில், தற்போது இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விரண்டுத் தொகுதிகளுக்கும் எப்போது தேர்தலை நடத்துவது என்பதை மத்திய அரசிடம் ஆலோசித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏப்.9ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.