இது குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதிவியில் இருந்து ராகுல் காந்தி நீங்கப்போவதாக தெரிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான், சசி தரூர் உட்பட பல எம்.பி.க்கள் டெல்லியில் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மத்திய - மாநில அரசுகள் இணைந்து வெள்ள நிவாரணம் அளிப்பது போல், இதற்கும் நிவாரண நிதி ஒதுக்கி தண்ணீர் பஞ்சத்துக்குத் தீர்வு காண வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தமிழ்நாட்டில், தண்ணீர் பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ. பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் தண்ணீர் பற்றாக்குறையைக் போக்குவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நித கேட்டது எதற்காக?
பெரிய கட்சிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வதும், நீக்கம் செய்வதும், சேர்ப்பதும் இயல்பாகும், ஆகையால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததற்கும், காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் குறித்தும் என்னால் கருத்து சொல்ல இயலாது. அது அவரவரின் விருப்பம்" என்று தெரிவித்தார்.