சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 50ஆவது வார்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் யாக்கூப்பை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுகவின் தலைமை வலிமையாக இல்லை. ஒரு ஒருங்கிணைப்பாளர் கொண்டு இயங்கவில்லை. இரட்டை தலைமையில் இயங்குகிறது. தமிழ்நாட்டிற்குள் சிவப்பு கம்பலம் விரித்து பாஜகவிற்கு வரவேற்பு அளித்து ஒரு வரலாற்றுப் பிழையை அதிமுகவினர் செய்துள்ளார்கள்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டின் உள்ளே மதவெறியை திணிக்கிறார்கள். இஸ்லாமியர், கிறிஸ்தவர் இடையே வெறுப்பை திணிக்கிறார்கள். இந்து மக்களிடையே சாதி வெறியை தூண்டுகிறார்கள். சாதி வெறியை தூண்டத் தூண்டதான் மத உணர்வு மேலோங்கும் என்ற உத்தியை கையாளுகின்றனர். எனவே, மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'