ETV Bharat / city

மூன்றாவது அணி! - பரவுமா ’டார்ச் லைட்’ வெளிச்சம்! - தேர்தல் 2021

சென்னை: தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் மூன்றாவது அணிகளுக்கு என்றுமே இடமிருந்ததில்லை என்றாலும் அதனால் சில தேர்தல்களில் தாக்கம் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. அதுபோல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் அமைத்துள்ள மூன்றாவது அணியால் என்ன நடக்கும் என்பதை பற்றிய ஒரு அலசல்.

kamal hasan
kamal hasan
author img

By

Published : Mar 4, 2021, 8:16 PM IST

Updated : Mar 5, 2021, 10:31 PM IST

தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மூன்றாவது அணி என்பது என்றுமே முகிழ்க்காத அணியாகவே இருந்துள்ளது. 1996 இல் வைகோ, 2006 இல் விஜயகாந்த், 2016 இல் மக்கள் நல கூட்டணி என பயங்கர எதிர்பார்ப்புகளோடு தேர்தல் களம் கண்டாலும், தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது அணி என்பது எடுபடாத அரசியலாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. இந்நிலையில்தான், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணியாக உருவெடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன்.

பல வாரங்களுக்கு முன்பே மாநிலம் முழுவதும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ள கமல் ஹாசன், தற்போது திமுக, அதிமுகவிற்கு மாற்றாக கூட்டணி சேர்க்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார். அதன்படி, அவரோடு முதலில் கூட்டணி பேசிய ஆம் ஆத்மி கட்சி, தமிழக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமாரின் சமகவும், பாரிவேந்தரின் ஐஜேகேவும் கமலுடன் இணைந்துள்ளன. அதோடு, நேற்று மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், இன்னும் மூன்று நாட்கள் தருகிறேன், வருபவர்கள் வந்து விடுங்கள் என்று கட்சிகளுக்கு சூசக அழைப்பும் விடுத்துள்ளார்.

மூன்றாவது அணி! - பரவுமா ’டார்ச் லைட்’ வெளிச்சம்!

தமிழ்நாட்டை பொருத்தளவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையே மக்கள் மாறி மாறி ஆட்சியில் அமரவைக்கின்றனர். இரண்டிற்கும் மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என வந்தவர்கள், ஒன்று பிற்காலங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டு வைக்கின்றனர் அல்லது தனியாகவே நின்று விடுகின்றனர். 90களில் இருந்தே இதனை நாம் பார்க்க முடியும். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வைகோ தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணி, மூன்றாவது அணியாக போட்டியிட்டு, அதில் மதிமுக மட்டும் 5.8% வாக்குகளைப் பெற்றது. அடுத்து, விஜயகாந்தின் தேமுதிக 2006 இல் நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 10% வாக்குகளை பெற்று, அடுத்து நடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. 2016 இல் நடந்த தேர்தலில் தேமுதிக, இடதுசாரிகள், விசிக, மதிமுக இணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணியால் 6.1% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஆக, தமிழ்நாட்டு தேர்தல்களில் மூன்றாவது அணியாக களம் காணும் கட்சிகளின் வாக்கு வீதம் இதுவரை 10%-ஐ கடக்க முடிந்ததில்லை. மூன்றாவது அணி வெற்றி பெற்றதாக வரலாறும் இல்லை. இந்நிலையில், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு 3.7% வாக்குகளை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மக்கள் நீதி மய்யம் அமைத்துள்ள மூன்றாவது அணியால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் என்ன நிகழப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கமலின் மூன்றாவது அணியால் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பா?

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் சீனிவாசன், "அதிமுக, திமுகவுக்கு சேர்த்தே 50 சதவீதம் தான் வாக்குகள் இங்குள்ளன. எஞ்சியுள்ள 50 சதவீத வாக்கு மூன்றாவது அணி உள்ளிட்ட மற்ற கட்சிகளைச் சேரும். மூன்றாவது அணி வலிமையாக இருப்பின், இரண்டு கட்சிகளுக்கும் அது பெரும்பான்மை வெற்றியை தருவதில்லை. 2006 இல் திமுக அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெறாததற்கு காரணம் தேமுதிக. 2016 இல் திமுகவிற்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு இருந்தும், மக்கள் நல கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாமல் போனது.

அந்த வகையில், மூன்றாவது அணி கண்டிப்பாக இத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியை தீர்மானிப்பதே மக்கள் நீதி மய்யமாகத்தான் இருக்கும். நகர்ப்புற இடங்களில் அதிக வாக்குகளை கமல் கட்சி பெறும். 8 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை கமல் ஹாசன் அமைக்கும் மூன்றாவது அணி பெறும்” என்றார்.

மூன்றாவது அணியால் திமுக கூட்டணி இம்முறை பெறப்போவது என்ன?

மக்கள் நீதி மய்யம் அமைக்கும் மூன்றாவது அணி அல்லாமல், அமமுக அமைக்கப்போகும் அணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு, ஐந்து அணிகள் இத்தேர்தலில் வரிசைக்கட்டி நிற்பதால், யாருக்கு யார் ஸ்பாயிலராக இருக்கப்போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான தேர்தல் ஆணைய அறிவிப்பில் தெரியவரும்.

இதனிடையே, தமிழ்நாட்டில் இதுவரை மூன்றாவது அணி வெற்றி பெற்றதில்லையே எனக் கமலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நீங்கள் சொல்வது சரித்திரம்; நாங்கள் சொல்வது மாற்றம்" என்று பதிலளித்தார். பார்ப்போம்.

இதையும் படிங்க: எங்கு நின்றாலும் தொண்டர்கள் வெற்றிபெற வைப்பார்கள் - விஜய பிரபாகரன் நம்பிக்கை

Last Updated : Mar 5, 2021, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.