ETV Bharat / city

கடை முன் படுத்து உறங்குவது போல நடித்து நூதனமாக திருடிய கொள்ளையர்கள்... - Ya Kabab Biryani Restaurant

சென்னையில் பூட்டிய உணவகத்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடை முன் படுத்து உறங்குவது போல நடித்து நூதனமாக திருடிய கொள்ளையர்கள்...

author img

By

Published : Sep 18, 2022, 8:51 AM IST

சென்னை: விருகம்பாக்கம், அருணாச்சலா சாலையில் 'யா கபாப்' என்ற பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த பிரியாணி உணவகத்தை நடத்தி வரும் அதன் மேலாளர் அப்சல் வழக்கம் போல நேற்று இரவு கடையை மூடிவிட்டு, இன்று காலை வந்து பார்த்த போது உணவகத்தின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் மற்றும் லேப்டாப் காணாமல் போயுள்ளது. இதையடுத்து கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத இருவர் கடை முன் வந்து படுத்திருக்கின்றனர். பிறகு உறங்குவது போல நடித்து அதில் ஒருவர் உணவகத்தின் கடையின் ஷட்டர் பூட்டை மெதுவாக உடைத்து கடைக்குள் சென்று கொள்ளையடிப்பது போல பதிவாகி இருந்தது.

நூதன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி

உடனடியாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மோடியை பெரியாராக காட்டுவது தமிழகத்தில் நடக்காது - திருமாவளவன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.